ஏணிக்கல்வி நிலையத்தின் Graduate for all

posted Aug 28, 2010, 11:34 PM by Sivatharisan Paranirupasingam   [ updated Aug 30, 2010, 5:09 PM by Prasath Mendis Appu ]

முத்தமிழ் வித்தகர் பிறந்த எமது கிராமத்தின் கல்வி வளத்தை மேலும் விருத்தி செய்வதற்காக ஏணிக்கல்வி நிலையத்தினால் Graduate for all எனும் வெளிவாரி பட்டதாரிகள் வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளனர். இலங்கையின் முதலாவது தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் எனக்கூறி மார்பு தட்டிக் கொண்டு இருக்கும் எம்மவர்களால் பேச்சளவில் நின்று விடாமல் இருக்கின்ற வளத்தைக் கொண்டு பல வெளிவாரி பட்டதாரிகளை உருவாக்க எடுக்கும் ஓர் அரிய முயற்சி இது. இப்பணி 2000-2004ம் ஆண்டு காலப்பகுதியில் சக்தி கல்வி நிலையத்தினால் முன் எடுக்கப்பட்டு 25 பட்டதாரிகளை உருவாக்கி கௌரவ விழாவும் நடாத்தியதை நாம் மறந்து விடலாகாது. அம் முயற்சிக்கு தடையாக இருந்தது மாணவர்கள் வெளிவாரி பட்டப்படிப்பில் நாட்டம் காட்டாமையாகும். ஆனால் இன்றைய நிலையில் மாணவர்களின் ஆர்வத்தினாலும், அவர்களுக்கு எற்படும் பிரயாணக்கஸ்ரம், நிதி நெருக்கடி, கலாச்சார சீரழிவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு ஏணிக்கல்வி நிலையத்தினால் இம் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இவ் வகுப்புக்கள் காரைதீவு மாணவர்களுக்கு மட்டுமன்றி வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கொடுக்கம் களமாக உள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பதிவை மேற்கொண்டு பட்டப்படிப்பை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடைபெற உள்ளது. இதனை விட தென்கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் போன்றனவற்றில் பதிவை மேற்கொண்டு பயிலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடங்களை ஆரம்பிக்க வேண்டுமானாலும் எமது கல்வி நிலைய விரிவுரையாளர்களினால் வகுப்புக்கள் நடாத்தப்படும் என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

01.    முதலில் ஆரம்பிக்க இருக்கின்ற வகுப்புக்கள் பேராதனை பதிவு 2009ம், 2010ம் கல்வி ஆண்டு G.A.Q மாணவர்களுக்கு 11.09.2010 சனிக்கிழமை பாடவிரிவுரை, கடந்தகால வினாப்பத்திர வகுப்புக்கள் ஆரம்பமாகின்றது.

02.    பேராதனை பதிவு 2009ம் கல்வி ஆண்டில் G.A.Q பரீட்சை எழுதியவர்களின் B.A வகுப்புக்கள்
September மாதம் பரீட்சை முடிவு வெளியீட்டை தொடர்ந்து ஆரம்பமாகின்றது.

03.    பேராதனை பதிவு 2011ம் கல்வி ஆண்டு புதிய மாணவர்களுக்கு (2010ல்
G.C.E (A/L) எடுத்த மாணவர்கள்) ஜனவரி மாதம் G.A.Q வகுப்புக்கள் ஆரம்பமாகின்றது.

விரிவுரைகள் நடைபெறும் இடம்
ஏணிக் கல்வி நிலையம்,
பிரதான வீதி,
காரைதீவு-10(கி.மா)
(காரைதீவு மத்திய நூலகம், காரைதீவு பொதுச்சந்தை கட்டத்திற்கு அருகாமையில்)

விரிவுரையாளர்கள் விபரம்
 
      அரசியல்     - க.சங்கரலிங்கம் (M.A)
     தமிழ்        - U.L.பிர்தௌஸ்(M.Phil), (Reading PHD)
     அளவையியல் - க.பத்மராஜா(M.A).(Reading MPhil, MED)                     
     இந்துநாகரீகம் - இ.இரத்தினகுமார் (Reading MED)
     புவியியல்    -  முகமட். சாஹீர் (Reading M.Sc).
     பொருளியல்  - S.வரதராஜன் (B.com).
     இஸ்லாமிய நாகரிகம் - A.H  . சபீர்; முகமட் (B.A)

எமது கல்வி நிலையத்தின் சேவைகள்


    பல்கலைக்கழக பதிவு, பரீட்சை விண்ணப்படிவம், பதிவில் ஏற்படும் பிரச்சனைகளை                     தீர்த்தல், மாணவர்களக்கு தேவையான ஏனைய ஆலோசனைகள்.
    விரிவுரைகளுக்கான கட்டணம் குறைவு.
    வெளிவாரி படிப்பை தொடர முடியாமல் இருக்கும் பொருளாதார நலிவு உள்ள                                 மாணவர்களுக்கான வெளிநாட்டு நலன்விரும்பிகளின் நிதிப்பங்களிப்பினால் தரப்படும்                 புலமைப்பரிசில்.
    அனுபவம் நிறைந்ததும், ஆளுமைமிக்கதும், மாணவரின் கற்றலில் நோக்கமாக இருக்கும்             விரிவுரையாளர்களின் விரிவுரைகள்.
    பாடம் சார்ந்த நிபுணத்துவ ஆசிரியர்களின் விசேட கருத்தரங்குகள்.

Graduate for all  திட்டத்தின் மற்றுமொரு முயற்சி

2012ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பதிவை குறிவைத்து 2011ம் ஆண்டு G.C.E (A/L) பரீட்சையில் சித்தி அடைவதற்கான வகுப்புக்கள் நடைபெற உள்ளன. இவ்வகுப்பு 2011ம் ஆண்டு ஜனவரி 08ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2011ம் ஆண்டு யூலை 31 வரை குறுகிய 01 வருடத்திற்குள் பாடங்கள் தெளிவாகவும், G.C.E (A/L) பரீட்சை சித்தியை மையமாகக் கொண்டு (பல்கலைக்கழக பதிவு) வகுப்புக்கள் நடைபெறும். இவ் வகுப்புகளுக்கு பொருத்தமானவர்கள் யார்?

    2010ம் ஆண்டு வர்த்தகம், கலை G.C.E (A/L) பரீட்சையில் 'YES' புள்ளி பெறாதவர்கள்.
    கணிதம், விஞ்ஞானம், போன்ற G.C.E (A/L) பரீட்சையில் இதுவரை 'YES' புள்ளி                             பெறாதவர்கள்.
    2010ம் ஆண்டு G.C.E (A/L) பரீட்சைக்கு முன் G.C.E (A/L) பரீட்சை எழுதி  'YES' புள்ளி                 பெறாதவர்கள்.
    G.C.E (A/L) பரீட்சை எழுதுவதற்கு தகுதியானவர்கள்.(G.C.E (O/L)பரீட்சை                                 எடுத்தவர்கள்.

          விரிவுரையாளர்கள் விபரம்

     ரசியல்     - க.சங்கரலிங்கம் (M.A)
     தமிழ்        - U.L.பிர்தௌஸ்(M.Phil), (Reading PHD)
     அளவையியல் - க.பத்மராஜா(M.A).(Reading MPhil, MED)                     
     இந்துநாகரீகம் - இ.இரத்தினகுமார் (Reading MED)
     புவியியல்    -  முகமட். சாஹீர் (Reading M.Sc).
     பொருளியல்  - S.வரதராஜன் (B.com).
     இஸ்லாமிய நாகரிகம் - A.H  . சபீர்; முகமட் (B.A)
    
வெளிநாட்டில் உள்ள காரைதீவின் உறவுகளிடம் ஏணிக்கல்வி நிலையத்தின் அன்பான வேண்டுகோள்.......

   எமது கிராமம் கல்வியில் மிகவும் பழம்பெரும் சைவக்கிராமமாக திகழ்கிறது. இதற்கு தாய்போல் கட்டிகாக்கும் கண்ணகை அம்பாள், சித்துக்கள் மூலம் மக்களுக்கு அறியாமையைப் போக்கிய சுவாமி சித்தானைக்குட்டி, பிள்ளைகளின் கல்விக்காக தன்னையே அர்பணித்த சுவாமி நடராஜானந்தா, துறவறத்தை இளமையில் கைப்பிடித்து கல்விக்காக அர்பணித்த சுவாமி விபுலானந்தர் போன்றோர்களினால் காரைதீவு இன்றும் கல்வியை பறை சாற்றிக் கொண்டு இருக்கிறது.

குமர குருபர சுவாமிகள் அருளிய சரஸ்வதி தேவியின் துதியில் இருந்து
.... இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்னை யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத் தறி வித்தல்.....


  இவ் துதிக்கமைய கல்வியின் மகத்துவத்தை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. காரைதீவில் பல வெளிவாரி பட்டதாரிகளை உருவாக்கும் நன் நோக்கத்திற்காக வெளிநாட்டில் உள்ள காரைதீவின் உறவுகளிடம் உதவியை கோருகிறோம். வெளிநாட்டில் இருந்து வரும் காரைதீவு உறவுகள் சில வீண் விரயங்களில் செலவுகள் செய்து வருவது மிகவும் மனம் வருந்தத்தக்க விடயமாக இருக்கிறது. இவ்வாறான செலவை தவிர்த்து நிதியை கல்விக்கு முதலீடு செய்வோமானால் நாம் எதிர்கால கல்வி வளத்தை பெருக்குவதுடன் அது முதலீடாக மாறுகிறது என்பது கல்விச் சிந்தனையாகும்.

     வெளிவாரி பட்டப்படிப்பு கற்கைக்கு

01 மாணவருக்கு 01 மாதத்திற்கு 1000/= தேவைப்படுகிறது.
02 வருடக்கற்கையாக இருப்பதனால் 24000/= தேவைப்படுகிறது. கற்பதற்கு தகுதியிருந்தும்,                 கற்பதற்கு ஆவல் இருந்தும் இவ் நிதி இல்லாமல் எத்தனையோ மாணவர்கள் பட்டப்படிப்பு             கற்கையை கனவு கண்டு வருகின்றனர். இவ்வாறு அவன் பட்டம் பெற்று தொழில்                             பெறுவானாயின் அவனது ஒரு மாதச் சம்பளம் 24000/= காணப்படுகிறது. இதனால் அவனது             குடும்பம், பிரதேசம், ஊர் போன்றன நன்மை பெறும் என்பது மறுப்பதற்றல்ல. எனவே                     வெளிநாட்டில் உள்ள காரைதீவின் உறவுகளிடம் வேண்டுவது என்னவெனில் எங்களால்                  அடையாளம் காணப்பட்ட பொருளாதாரம் வளம் குன்றிய மாணவர்களுக்கு எங்கள்                         மூலமாகவோ அல்லது மாணவர்களுக்கு நேரடியாகவோ நிதி உதவி வழங்குமாறு                         வேண்டுகிறோம். இதற்கான சாதகமான பதில்களை எதிர்பார்க்கின்றோம்.

   புலமைப்பரிசில் வழங்க வேண்டிய (உதவி பெறுவதற்கு தகுதியானவர்கள்) மாணவர்கள்  இணையதளத்தில் இணைக்கப்பட்டிருக்கும. அவர்களது பெயர், முகவரி, தொடர்பு என்பன தெளிவாக காட்டப்படும். அவர்களுக்கு தேவையான பங்களிப்புகளை நீங்கள் வழங்கலாம். சுனாமி நிதியினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக  வெளிநாட்டில் உள்ள காரைதீவின் உறவுகளினால் (Tsunami Refugees Relief/ Welfare Activities Committee)    க்கு வழங்கப்பட்ட ரூபா 2,53,758/=நிதி சனசமூக நிலையங்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டது போன்று இவ் செயற்பாட்டிற்கும் உங்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கின்றோம். இவை அனைத்தும் Graduate for all என்ற எண்ணக்கருவிற்கமையவே.

தொடர்புகளுக்கு

01. க.யோகேஸ்வரன்(B.A)
   பணிப்பாளர்.
   ஏணி கல்வி நிலையம்.
   பிரதான வீதி,
   காரைதீவு-10(கி.மா)
Telephone  Mobile  0776516527
Email     yogeswaran73@gmail.com

02. திரு.க.பத்மராஜா(வழிகாட்டல் ஆலோசனைக்கான ஆசிரியர்)
      M.A, Reading M.Phil, Reading MED,
      Dip-in-Edu, Dip-in-Counselling, Dip-in-Human Rights.
      Telephone House    0672250474
      Mobile                   0776759082
      Email       Karaipathman@Gmail.Com.

Comments